
இன்றைய காலத்தில் குழந்தைகள் மிகவும் சுட்டித்தனம் வாய்ந்தவர்களாக இருக்கின்றனர். சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ ஒன்றில் சிறுவர்கள் ஒரு ஆட்டோ ஓட்டுனரை படாதபாடுப்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் ஆட்டோ ஓட்டுனர் வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும்போது திடீரென ஒரு சிறுவன் ஆட்டோவில் இருந்து வெளியே குதித்துள்ளார்.
புள்ளையா இதுங்க 🤣🤣
ஏண்டா உசிரா வாங்கிறீங்க 😒😁 pic.twitter.com/i3ylh6Ob8S— ஹேமா🦋✨ 헤마 (@yinyong80826) July 8, 2025
அவரை ஆட்டோவில் ஏற்றுவதற்குள், மற்றொரு சிறுவர் ஆட்டோவில் இருந்து வெளியே வந்து வேகமாக ஆட்டோவை ஸ்டார்ட் செய்துவிட்டு ஓடிவிட்டார்.
இதனால் ஆட்டோ கட்டுப்பாடு இன்றி முன்னோக்கி சென்றது. உடனே ஓட்டுனர் ஆட்டோவை பிடித்து இழுத்து நிறுத்தினார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி நெட்டிசன்கள் பலரும் நகைச்சுவையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.