
அசாம் மாநிலத்தில் கடந்த ஆண்டு 2021- 2022 வருடத்தில் அசாம் காவல்துறையினரால் 117 என்கவுண்டர் செய்யப்பட்டன. ஒரே வருடத்தில் அதிகமான என்கவுண்டர்கள் செய்து அதிகமானோர் கொல்லப்பட்டனர். இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு கவுகாத்தி நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டது. ஆனால் இந்த மனு நிராகரிக்கப்பட்டது. இதனால் உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்ட விவகாரம் நீதிபதிகள் சூரியகாந்த், உஜ்ஜன் புயான் ஆகியோர் அமர்வு முன் நடத்தப்பட்டது.
இந்த விசாரணை குறித்து நீதிபதிகள் கூறியதாவது, ஒரே ஆண்டில் 117 என்கவுண்டர்கள் எதற்காக செய்யப்பட்டன. இந்த செயல் சாதாரணமான செயலல்ல. காவல்துறையினர் குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டும் தாக்குகின்றனரா?, தங்களது அதிகாரங்களை தவறாக பயன்படுத்துகின்றனரா? என நீதிமன்றத்திற்கு விளக்கம் அளிக்க வேண்டும். இந்த 117 என்கவுண்டர்கள் குறித்த விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.