SDPI மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நாட்டு மக்களுக்கு  நன்மை செய்ய வேண்டும் என்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி. இதைய தெய்வம்   புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கிட்டத்தட்ட இரண்டு மாத காலமாக தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து…. ரத்தத்தை வேர்வையாக சிந்தி….. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசை  உருவாக்கி தந்தார்கள்.

உருவாக்கிய அந்த  அரசை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக நாங்கள் சகித்துக் கொண்டிருந்தோம். பல்வேறு பிரச்சனைகள்,  கொஞ்ச நஞ்சமில்லை….  அத்தனை இடர்பாடுகளையும் நாங்கள் சகித்துக் கொண்டுதான்,  சிறப்பான ஆட்சியை அண்ணா திமுக அரசு நாட்டு மக்களுக்கு தந்தது. அப்பொழுது கூட போராட்டம் நடைபெற்றது. சிறுபான்மை மக்கள் போராட்டம் செய்தீர்கள். முழு பாதுகாப்பு கொடுத்தோம்.

யார் கேட்டாலும்,  எப்பொழுது வேண்டுமானாலும் போராட்டத்திற்கு நாங்கள் அனுமதி கொடுப்போம். இந்தியாவிலேயே அதிக போராட்டம் நடைபெற்ற காலம் அம்மா அரசு இருந்த பொழுதுதான்…. பல்லாயிரக்கணக்கான போராட்டம்….  இந்த மண்ணிலே  பிறந்த ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு போராடுவதற்கு…..  அவரவர்  உரிமைக்காக அவரவர்கள்  போராடுகிறார்கள், அதை நாங்கள் எப்பொழுதும் தடுப்பது கிடையாது என தெரிவித்தார்.