செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, என்னுடைய நியாயமான கோரிக்கை. எதிர்க்கட்சி துணை தலைவர் நியமனம் குறித்தும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருக்கு அருகில் துணை தலைவர் அமர வைக்க வேண்டும் என்பது ஒன்று. மற்றொன்று நீதிமன்றமே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக மூன்று உறுப்பினர்கள் நீக்கப்பட்டது செல்லும் என்று தீர்ப்பு கொடுக்கப்பட்டது.

இந்த மூன்று பேரையும் எக்கட்சியும் சாராதவர் என்று அறிவிக்க வேண்டும். இதை  அறிவிப்பதில் என்ன இருக்கின்றது ? எல்லாம் குடுத்தாச்சி… தகுதி நீக்க வேண்டும் என்று  கொடுத்தாச்சி….   உயர்நீதி மன்ற டிவிஷன் பென்ச் அளித்த தீர்ப்பின் நகலையும் கொடுத்தாச்சி. பொதுக்குழு நீக்கியது. அதை  எதிர்த்து தான் அவுங்க அங்க போனாங்க.   நாங்க ஏற்கனவே பொதுக்குழு எடுக்கப்பட்ட முடிவின்படி கடிதம் கொடுத்தோம். பிறகு டிவிஷன் பென்ச் அளித்த….  நீதிமன்றம் அளித்த தீர்ப்பு அதனுடைய நகலையும் கொடுத்தோம், இன்னும் நடவடிக்கை எடுக்கல.

கொறடா கொடுக்குறத செய்யப்படுத்தணும்னு மரபு இருக்கு. எந்த மரபையும் கடைபிடிக்க மாட்டேங்குறாங்க. நாங்க எல்லா தீர்ப்பினுடைய நகலையும் கொடுத்துவிட்டோம்.  சட்டப்பேரவை தலைவர் மரபு இருக்கின்றது. அவரைப்போல நாங்க பேச தயாராக இல்லை. மனசாட்சிப்படி இருக்கிறோம். சட்டத்தை மதிக்கின்றோம். அவையும் மதிக்கின்றோம். எங்களுடைய உரிமை தான் கேக்கிறோம். நாங்க வேற ஒன்னும் கேட்கலை என தெரிவித்தார்.