இந்தியாவில் உள்ள பிரபலமான நடிகராக இருப்பவர் ராஜ் கபூர். இவரின் குடும்பத்தைச் சேர்ந்த ரன்வீர் கபூர், கரீனா கபூர் ஆகியோர் தற்போது திரையுலகில் பிரபலமாகி வருகின்றனர். ராஜ் கபூர் கடந்த 1924 ஆம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி பிறந்தார். இந்நிலையில் இவரது 100வது பிறந்த நாளை அவரது குடும்பத்தினர் விமர்சையாக கொண்டாடியது. இதில் பிரதமர் மோடியும் கலந்து கொண்டார். அதன் பின் ரன்பீர் கபூர், ஆலியா பட், கரீனா கபூர், சைஃப் அலிகான் ஆகியோருடன் சேர்ந்து பிரதமர் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்நிலையில் கரீனா கபூர் குடும்பத்தை நேரில் சென்று பிரதமர் மோடி சந்தித்ததால் காங்கிரஸ் தலைவர் பவன் கேரா விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, நாங்கள் மணிப்பூர் என்று சொன்னதை பிரதமர் கரீனா கபூர் என்று நினைத்து கொண்டார் போல என்று அவர் கூறினார். மணிப்பூர் மாநிலத்தில் கைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு கலவரம் தொடங்கியது. இந்த கலவரத்தில் மொத்தம் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் செல்ல வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தது. ஆனால் தற்போது வரை பிரதமர் மோடியும் மணிப்பூருக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.