
மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மாநிலத்தில் உள்ள கிராமப்புற மக்களுக்கு வீடுகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இந்தத் திட்டத்தின் கீழ் 21 மாவட்டத்தில் உள்ள 42 பயனாளிகளுக்கு இதற்கான நிதியை வழங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பேசிய மம்தா பானர்ஜி கூறியதாவது, பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்றால் தங்களது அரசு தங்களது சொந்த முயற்சியில் இந்த திட்டத்தை செயல்படுத்தும் என கூறினார்.
மத்திய அரசிடம் இருந்து 24 ஆயிரம் கோடி ரூபாய் இன்னும் வழங்கப்படவில்லை. ஆனால் நாங்கள் பிச்சை எதுவும் எடுக்கவில்லை. மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்றால் எங்கள் சொந்த திட்டத்தின் கீழ் செயல்படுவோம் எனவும் கூறினார். மேலும் மத்திய அரசின் ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்குவதும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை புறக்கணிக்கும் வேலையை மத்திய அரசு காலம் காலமாக செய்து செய்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.