2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது. நவம்பர் 19ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டிக்காக தான் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளை இணையதளத்தில் ரசிகர்கள் புக் செய்து கொள்ளலாம். இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான முதல் அரை இறுதி போட்டி நாளை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.