பொதுவாக ஒவ்வொருவரும் தங்களுடைய ஓய்வுக்கு பிறகு நிலையான வருமானம் வர வேண்டும் என்று விரும்புவார்கள். அந்த வகையில் ஓய்வுக்கு பிறகு நிலையான வருமானத்தை பெறுவதற்கு எல்ஐசியில் நிறைய ஓய்வூதிய திட்டங்கள் இருக்கிறது. இந்த ஓய்வூதிய திட்டத்தில் இணைவதன் மூலம் ஒவ்வொரு மாதமும் மக்கள் பென்ஷன் பெறலாம். இந்நிலையில் எல்ஐசியின் ஜீவன் சாந்தி திட்டம் ஒரு பிரீமியம் திட்டமாகும். இந்த பாலிசி திட்டத்தில் நீங்கள் இணைந்த பிறகு உங்களின் பென்சன் தொகை நிர்ணயிக்கப்படும்.

இந்த பாலிசியில் குறைந்தபட்சம் 1.5 லட்ச ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்சமாக முதலீடு செய்வதற்கு வரம்பு இல்லை. இந்த பாலிசியை 30 வயது முதல் 79 வயது வரை உள்ளவர்கள் எடுத்துக் கொள்ளலாம். ஒருவேளை பாலிசிதாரர் இறந்தால் அவருடைய நாமினிக்கு மாத ஓய்வூதியம் கிடைக்கும். இந்த பாலிசி திட்டத்தில் ஆண்டு, அரையாண்டு, காலாண்டு மற்றும் மாதாந்திர முறையில் முதலீடு செய்யலாம். மேலும் 37 வயது நிரம்பிய நபர் இந்த பாலிசியில் இணைந்து ரூ. 20,36,000 முதலீடு செய்கிறார் என்றால் அவருக்கு‌ ரூ.10,067 என்கிற அளவில் மாதந்தோறும் பென்சன் தொகை கிடைக்கும்.