
சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தன் பயணத்தை துவங்கி தற்போது மக்கள் மனதில் உயர்ந்து இருப்பவர் மணிமேகலை. தொகுப்பாளராக இருந்தபோது ஒரு பாடலில் நடனமாடியவர் மீது காதல் ஏற்பட்டு அவரையே பெற்றோர்கள் விருப்பம் இன்றி திருமணம் செய்துகொண்டார் மணிமேகலை.
இதையடுத்து விஜய் டிவி பக்கம் வந்த அவர் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், போட்டியாளராகவும் இருந்து உள்ளார். அதேபோன்று சொந்தமாக யூடியூப் பக்கம் திறந்து அதன் வாயிலாகவும் சம்பாதித்து வந்தார். இதனிடையே மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து திடீரென்று வெளியேறி தற்போது சொந்த விஷயங்களை கவனித்து வருகிறார்.
மணிமேகலை மற்றும் அவரது கணவரான ஹுசைன் இருவரின் மதம் வெவ்வேறு என நமக்கு தெரியும். இதுகுறித்து அண்மையில் டுவிட்டரில் ஒரு மீம் வைரலாகியது. அதைப் பார்த்த மணிமேகலை தன் டுவிட்டர் பதிவில் இப்படி லைப் புல்லா உலறிட்டு இருக்கிறதுக்கு போய் உறுப்புடியான வேலையை பார்க்கலாம்ல என பதிலடி கொடுத்து உள்ளார்.
Ipdi life fulla ularitey irukaradhuku poi urupadra vazhiya paakalamla 🤦♂️ https://t.co/VfokoEg0Wt
— MANIMEGALAI (@iamManimegalai) March 22, 2023