மணிரத்னம் டைரக்டு செய்த “பொன்னியின் செல்வன்” திரைப்படம் 2 பாகங்களாக தயாராகி முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி உலகம் முழுவதும் 5 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தியது.

இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உட்பட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தின் 2-ஆம் பாகம் அடுத்த மாதம் 28ம் தேதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் வேடத்தில் நடித்திருக்கும் விக்ரமின் தோற்றம் வடிவமைக்கப்பட்ட வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதோடு இந்த வீடியோவில் டிரைலர் விரைவில் வெளியாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.