
சன் தொலைக்காட்சியில் பல வருடங்களுக்கு முன்பு காமெடி டைம் என்ற நிகழ்ச்சியில் ஆங்கர் ஆக பணிபுரிந்து வந்து அதன் பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியிலும் பணிபுரிந்தார் அர்ச்சனா. இதற்கிடையில் அர்ச்சனா பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பிரபலமானார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கிடையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சூப்பர் மாம் என்ற நிகழ்ச்சியை அர்ச்சனாவும் அவருடைய மகளான சாராவும் சேர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார்கள்.. இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதேபோல சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டாக்டர் படத்தில் அர்ச்சனாவும் அவருடைய மகள் சாராவும் சேர்ந்து நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் வி.ஜே அர்ச்சனா ஒரு வீடியோக்காட்சியை வெளியிட்டுள்ளார். அதில் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பாடல்கள் பாடி பிரபலமான குழந்தை வர்சினி, என்பதால் இந்த வீடியோ இணையவாசிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இது போல் சாதிக்க நினைக்கும் குழந்தைகளுக்கு வாய்ப்பு கொடுத்தால் சிறந்தாக இருக்கும் என கமண்ட்களை செய்து வருகிறார்கள்.
View this post on Instagram