உத்தரபிரதேசம் முசாபர் நகரிலுள்ள தெருக்களில் துணி விற்பனை செய்து வருபவர் இஜாஸ் அகமது(40). இவர் நாளொன்றுக்கு ரூபாய்.500 சம்பாதித்து உள்ளார். இந்நிலையில் இஜாஸ் மீது ரூ.366 கோடி வரை GST மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

வேறு ஒருவர் தன் பெயரில் இந்த மோசடி செய்து இருப்பதாகவும், இதன் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளியை ஜிஎஸ்டி துறை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் இஜாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கிடையில் ஜிஎஸ்டி அதிகாரி கூறியதாவது, ரூபாய்.300 கோடிக்கு மேல் பில்கள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது முழுமையான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு நிறுவனங்கள் மற்றும் சில நபர்கள் எங்களது கண்காணிப்பில் இருக்கின்றனர் என்று கூறினார்.