
விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. பயிர் முதலீட்டுக்கு உதவும் விதமாக மத்திய அரசு பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
இந்த திட்டத்தில் தலா ரூ.2,000 வீதம் 3 தவணைகளாக மொத்தம் ரூபாய்.6,000 விவசாயிகளின் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. இந்நிலையில் விவசாயிகள் 14வது தவணைத்தொகையை எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்த மாத இறுதிக்குள் 14வது தவணைத்தொகையை மத்திய அரசு டெபாசிட் செய்ய வாய்ப்பு உள்ளது. இதனிடையே சில விவசாயிகள் 14வது தவணையாக ரூ.4 ஆயிரம் பெறவுள்ளனர். ஏனென்றால் கடந்த தவணையில் ரூ.2 ஆயிரம் பெறாத விவசாயிகள் இந்த முறை அந்த தொகையை பெறுவார்கள்.