
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அக்டோபர் 2-ம் தேதி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுக மற்றும் தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த நிலையில் அன்று முதல் தமிழக அரசியல் வட்டாரத்தில் இது பற்றி தான் பரபரப்பாக பேசப்படுகிறது. இதைத்தொடர்ந்து இன்று திமுகவின் ஆட்சி அதிகாரத்தில் கூட்டணி கட்சிகளுக்கும் பங்கு வேண்டும் என்பது போல் திருமாவளவன் கூறியிருந்தார். இது தொடர்பான வீடியோ திருமாவளவன் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்ட நிலையில் அது சர்ச்சையை ஏற்படுத்தியதால் நீக்கப்பட்டது. பின்னர் ஆட்சி அதிகாரத்தின் பங்கு என்பது விசிக ஆரம்பத்திலிருந்து வலியுறுத்தும் கருத்துதான் என்று திருமாவளவன் விளக்கம் கொடுத்தார்.
இந்நிலையில் திமுக கூட்டணியில் இருந்து விசிக கட்சி விலக இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இதற்கு தொல். திருமாவளவன் விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது திமுக கூட்டணியில் இருந்து விலகும் என்னும் ஒருபோதும் விசிகவுக்கு கிடையாது என்று தெரிவித்துள்ளார். இப்போதும் திமுக கூட்டணியில்தான் விசிக இருப்பதாகவும் கூட்டணி எப்போதும் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அது ஒழிப்பு மாநாட்டை தேர்தலுடன் ஒப்பிட வேண்டாம் என்று கூறிய அவர் இதனை அதனுடன் தேர்தல் கூட்டணிக்காக மாநாடு நடத்தினால் அதைவிட அசிங்கம் எனக்கு வேறு எதுவுமே கிடையாது என்று கூறினார்.