நடிகர் விஷாலுக்கு எதிராக லைக்கா நிறுவனம் தொடர்ந்து வழக்கை நீதிபதி பி.டி.ஆஷா முன்பு பட்டியலிட உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.

விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக 21 கோடியே 29 லட்சம் ரூபாய்க்கு கடனை சினிமா பைனான்சியர் அன்பு செழியனிடம் விஷால் பெற்றிருந்தார். இந்த கடனை நாங்கள் அடைகிறோம் என்று லைக்கா நிறுவனம் முன் வந்திருந்தது. இதற்காக லைக்கா நிறுவனத்திற்கும் –  விஷாலுக்கும் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது.

அந்த ஒப்பந்த என்னவென்றால் ? விஷால் பட நிறுவனத்தின் சார்பாக  தயாரிக்கவும் படங்கள் தங்கள் நிறுவனத்திற்கு வழங்க வேண்டும். வேறு நிறுவனங்களுக்கு வழங்கக்கூடாது. கடனை அடைக்கும் வரை இந்த ஒப்பந்தம் தொடரும் என்று முடிவு எடுக்கப்பட்டது. இதை மீறி சில படங்களை விஷால் தரப்பு படங்களை வெளியிட்டது. எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் லைக்கா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி கடனை செலுத்த உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை விஷால் தரப்பு நிறைவேற்றவில்லை என்று லைக்கா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு இன்று நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு  விசாரணைக்கு முன்வைக்கப்பட்டது.

அப்போது நீதிபதி,  மார்க் ஆண்டனி படம் வெளியான வெளியான பிறகும் கடனை ஏன் அடைக்க வில்லை என்று கேள்வி எழுப்பினார். அப்போது லைக்கா நிறுவனம் தரப்பில், இது தொடர்பான வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி.ஆஷா ஏற்கனவே  உத்தரவை பிறப்பித்திருக்கிறார்.  நீதிமன்றத்தில் விஷால் நேரில் விளக்கமளித்து இருந்தார் என்று லைக்கா நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டதாக்க லைகா சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதி அப்துல் குத்தூஸ் இந்த வழக்கை மீண்டும் நீதிபதி பி.டி.ஆஷா முன்பு பட்டியலிடும்படி உத்தரவிட்டிருந்தார். அப்போது விஷால் தரப்புக்கு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் நீதிபதி பி.டி.ஆஷா முன்பு வழக்கை பட்டியலிட எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை  நீதிபதி அப்துல் குத்தூஸ் நிராகரிக்க,  நீதிபதி லைக்கா நிறுவனம் தொடர்ந்த வழக்கை நீதிபதி பி.டி.ஆஷா பட்டியலிடும்படி நீதிமன்ற பதிவுதுறைக்கு உத்தரவிட்டிருக்கிறார். எனவே ஓரிரு நாட்களி நீதிபதி பி.டி.ஆஷா முன்பு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.