
நடப்பு ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில் நேற்று முன்தினம் குஜராத் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதியது. இந்த மேட்சில் 6 விக்கெட் வித்தியாசத்தில் 198 ரன்கள் எடுத்து குஜராத் அணி வெற்றி பெற்றது. இதனால் பிளே ஆப் சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை பெங்களூரு அணி இழந்தது. இருப்பினும் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் விராட் கோலி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
விராட் கோலி 101 ரன்கள் எடுத்து சதம் அடித்து அசத்தினார். பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 197 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியை விராட் கோலியின் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா நேரில் பார்த்தார். விராட் கோலி சதம் அடித்தபோது மகிழ்ச்சியில் அனுஷ்கா சர்மா அவருக்கு பிளையிங் கிஸ் கொடுத்தார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
Anushka Sharma fly kissing😘pic.twitter.com/Zn57SAhyrX
— Daddyscore (@daddyscore) May 21, 2023