கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மருதமலை சாலை நவாவூர் அருகே பாலாஜி என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு எதிரே இருக்கும் நிறுவனத்தில் கோகுல்ராஜ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கோகுல்ராஜ் மளிகை கடைக்கு சென்று பிஸ்கட் வாங்கி சாப்பிட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து வேறொருவர் வந்து கோகுல்ராஜ் பணத்தை தவற விட்டு சென்று விட்டதாகவும், அதனை தர வேண்டும் என கேட்டார். அங்கு தேடிய போது 6000 ரூபாய் கிடந்தது.

அதனை எடுத்த பாலாஜி உங்களை யார் என்று தெரியாததால் பணத்தை தரமாட்டேன். கோகுல் ராஜை வர சொல்லுங்கள் என தெரிவித்தார். உடனே அந்த நபர் கோகுல்ராஜை அழைத்து சென்றுள்ளார். அங்கு வந்த கோகுல்ராஜ் ஏன் பணத்தை கொடுத்து அனுப்பவில்லை என பாலாஜிடிடம் கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த கோகுல்ராஜும் அந்த நபரும் பாலாஜியை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றனர். இதுகுறித்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.