தமிழகத்தில் செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு ஏற்கனவே காவல்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஆர்கே பேட்டை பகுதியில் விநாயகர் சிலை வைப்பதற்கு அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது காவல்துறை தரப்பில் 3 அமைப்பினர் ஒரே இடத்தில் வைப்பதற்கு அனுமதி கேட்டதால் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறினர். அதோடு வேறு இடத்தில் வைப்பதற்கு அனுமதி கேட்டால் பரிசீலனை செய்யப்படும் என்றும் கூறினர். இதனையடுத்து நீதிபதிகள் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என காவல்துறையினருக்கு உத்தரவிட்டனர். மேலும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத மக்கக் கூடிய சிலைகளுக்கு மட்டும்தான் அனுமதி வழங்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.