திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தா.புதுக்கோட்டை பகுதியில் விவசாயியான சௌந்தரராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சொந்தமான தோட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருக்கிறது. இந்த தோட்டத்தில் அவர் மக்காச்சோளம் அறுவடை செய்து சேமித்து வைத்துள்ளார். கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் சௌந்தரராஜன் காவல் பணியில் ஈடுபட்டுள்ளார்.

நேற்று முன்தினம் அதிகாலை 4 மணியளவில் யானை பிளிரும் சத்தம் கேட்டதால் சௌந்தரராஜன் திடுக்கிட்டு எழுந்தார். அப்போது தோட்டத்தில் சேமித்து வைத்திருந்த மக்கா சோளத்தை யானை தின்று கொண்டிருந்ததை பார்த்த சௌந்தரராஜன் சத்தம் போட்டு அதனை விரட்ட முயன்றார். அப்போது விடாமல் சௌந்தரராஜனை யானை துரத்தி சென்று தந்ததால் குத்தி தூக்கி வீசியதால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அறிந்த சௌந்தரராஜனின் உறவினர்கள் அந்த பகுதியில் குவிந்து அவரது உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது, “குட்டைகொம்பன்” என்ற உச்ச யானை தொடர்ந்த அட்டகாசம் செய்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்டபாணி என்பவரை தாக்கி கொன்றது. அதனை மயக்க ஊசி செலுத்தி பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டு விட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இது பற்றி அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன், மாவட்ட வன அலுவலர் பிரபு ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சௌந்தரராஜன் கொன்ற யானையை பிடித்து அடர்ந்த வன பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன்பிறகு அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனையடுத்து போலீசார் சௌந்தர்ராஜனின் உடலை மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.