தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்ததோடு பல சூப்பர் ஹிட் பாடல்களையும் பாடியுள்ளார். இவர் முன்னணி ஹீரோக்களை பொறுத்தவரையில் அஜித்துடன் மட்டுமே அதிகம் இணைந்து பணியாற்றியுள்ளார். ரஜினி மற்றும் கமல் ஆகியோர்கள் இளையராஜாவின் நண்பர்களாக இருந்தாலும் அவர்கள் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு இதுவரை யுவன் சங்கர் ராஜாவுக்கு கிடைக்கவில்லை.‌ கடந்த 20 வருடங்களுக்கு முன்பு ஜெகன் இயக்கத்தில் விஜய் நடித்த புதிய கீதை படத்தில் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். அதன்பிறகு யுவன் சங்கர் ராஜா மற்றும் விஜய் எந்த படத்திலும் இணையவில்லை.

இந்நிலையில் தற்போது நடிகர் விஜயின் 68-வது படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க இருப்பதாக ஒரு புதிய தகவல் வெளிவந்துள்ளது. நடிகர் விஜயின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் பெரும்பாலும் வெங்கட் பிரபுவின் படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைப்பார். விஜயின் 68-வது படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே படத்தின் வெற்றிக்கு யுவன் சங்கர் ராஜாவின் இசையும் மிகப்பெரிய காரணம். இதன் காரணமாக விஜய்யும் யுவன் சங்கர் ராஜா தன் படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் யுவன் சங்கர் ராஜா மற்றும் விஜய் கூட்டணி மீண்டும் இணையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.