இயக்குனர் சுந்தர்.சி காபி வித் காதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக அரண்மனை 4 பாகத்தை இயக்க உள்ளார். இதில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சந்தானம் ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர் என கூறப்பட்டது.

ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில் அரண்மனை 4 படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகுவதாக தகவல்கள் கசிந்துள்ளது. விஜய் சேதுபதி தற்போது தனது ஷூட்டிங் schedule-ல் பிஸியாக இருக்கின்றார் என்றும் இதனால் வருகின்ற ஏப்ரலில் தொடங்க திட்டமிட்டு இருந்த அரண்மனை 4 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாது எனவும் கூறப்படுகிறது.