சவுதி ப்ரோ லீக் தொடரில் ஒரே சீசனில் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற மகத்தான சாதனையை கிறிஸ்டியானோ ரொனால்டோ நிகழ்த்தினார். ஆனால் அவரால் இந்த தொடரை வெல்ல முடியவில்லை. சவுதி கோப்பை இறுதிப்போட்டியில் அல் ஹிலாலுக்கு எதிராக அல் நாசர் தோல்வி அடைந்ததை தொடர்ந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ கண்ணீர் விட்டு அழுதார்.

இந்தப் போட்டியில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததால் போட்டி சமனில் முடிந்தது. இதனால் பெனால்டி ஷூட் அவுட் முறை நடத்தப்பட்டது. அதில் 5-4 என்ற கோல் கணக்கில் அல் ஹிலால் அணி வெற்றி பெற்றது. இந்த தோல்வியை சற்றும் எதிர்பார்க்காத ரொனால்டோ மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுதார். அந்த காட்சி தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.