பிரபல கன்னட சின்னத்திரை நடிகராக இருப்பவர் வருண் ஆராதியா. இவருக்கு 4 ஆண்டுகள் முன்பு சமூக வலைதளம் மூலம் ஒரு இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறி உள்ளது. இதனால் இவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்துள்ளனர். ஒரு நாள் அந்த இளம் பெண் வருண் ஆராதியாவின் செல்போனை பார்த்து உள்ளார். அதில் வருண் ஆராதியா பல பெண்களுடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்துள்ளது.
அப்போது அந்த இளம் பெண் வருண் ஆராதியாவை விட்டு பிரிந்து சென்றுள்ளார். ஆனால் வருண் ஆராதியா தன்னுடன் காதலை தொடரவில்லை என்றால் புகைப்படம் மற்றும் வீடியோக்களை இணையதளத்தின் வெளியிடுவேன் என்று அந்த இளம் பெண்ணை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் பசவேஸ்வரா நகர் காவல்துறையினரிடம் புகார் அளித்ததை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.