சனவரி 8 கிரிகோரியன் ஆண்டின் எட்டாம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 357 (நெட்டாண்டுகளில் 358) நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

871 – பேரரசர் ஆல்பிரட் மேற்கு சாக்சன் இராணுவத்துக்குத் தலைமை தாங்கி டானிலாவ் வைக்கிங்குகளின் முற்றுகையை முறியடித்தார்.

1297 – மொனாக்கோ விடுதலை பெற்றது.

1454 – தெற்கு ஆப்பிரிக்காவில் வணிக, மற்றும் குடியேற்றங்களுக்கான முழு உரிமையையும் வழங்கும் திருத்தந்தையின் ஆணை ஓலை போர்த்துகலுக்கு வழங்கப்பட்டது.

1499 – பிரான்சின் பன்னிரண்டாம் லூயி மன்னர் பிரித்தானியின் ஆன் இளவரசியைத் திருமணம் புரிந்தார்.

1806 – கேப் குடியேற்றம் பிரித்தானியாவின் குடியேற்ற நாடாகியது.

1815 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: நியூ ஓர்லென்ஸ் சமரில் ஆன்ட்ரூ ஜாக்சன் தலைமையில் அமெரிக்கப் படைகள் பிரித்தானியப் படைகளை வென்றன.

1828 – ஐக்கிய அமெரிக்காவின் சனநாயகக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

1835 – ஐக்கிய அமெரிக்காவின் தேசிய கடன் சுழிய நிலையை எட்டியது.

1838 – ராபர்ட் கால்டுவெல் மதப் பணியாற்ற அயர்லாந்தில் இருந்து சென்னை வந்தார்.

1867 – வாசிங்டனில்யில் ஆப்பிரிக்க அமெரிக்க ஆண்கள் முதன்முறையாக வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

1889 – எர்மன் ஒல்லெரித் மின்னாற்றலில் இயங்கும் துளை அட்டைக் கணிப்பானுக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.

1902 – நியூயோர்க் நகரில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.

1906 – நியூயோர்க்கில் அட்சன் ஆற்றில் களிமண் கிண்டும் போது இடம்பெற்ற நிலச்சரிவில் 20 பேர் உயிரிழந்தனர்.

1912 – ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் அமைக்கப்பட்டது.

1916 – முதலாம் உலகப் போர் (கலிப்பொலி நடவடிக்கை): கூட்டுப் படைகள் துருக்கியின் கலிப்பொலியில் இருந்து வெளியேறின.

1926 – வியட்நாமின் கடைசி மன்னராக பாவோ டாய் முடிசூடினார்.

1926 – அப்துல்லா பின் அப்துல் அசீசு எஜாசு நாட்டின் மன்னராக முடிசூடி அதன் பெயரை சவூதி அரேபியா என மாற்றினார்.

1940 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியா உணவுப் பங்கீட்டை அறிமுகப்படுத்தியது.

1946 – கோவை சின்னியம்பாளையம் பஞ்சாலை தொழிலாளர் சங்க நிர்வாகிகள் நான்கு பேர் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டனர்.

1956 – எக்குவடோரில் ஐந்து அமெரிக்க மதப்பரப்புனர்கள் பழங்குடியினரால் கொல்லப்பட்டனர்.

1961 – அல்சீரியாவில் சார்லசு டி கோலின் கொள்கைகளுக்கு பிரஞ்சு மக்கள் பொது வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்தனர்.

1963 – ஐக்கிய அமெரிக்காவில் முதல் தடவையாக லியொனார்டோ டா வின்சியின் மோனா லிசா வாசிங்டன் தேசிய கலைக்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.

1964 – அமெரிக்க அரசுத்தலைவர் லின்டன் பி. ஜான்சன் அமெரிக்காவில் வறுமைக்கு எதிரான போரை அறிவித்தார்.

1972 – சர்வதேச அழுத்தத்தை அடுத்து, பாக்கித்தான் அரசுத்தலைவர் சுல்பிக்கார் அலி பூட்டோ வங்காளத் தலைவர் முசிப்புர் ரகுமானை சிறையிலிருந்து விடுவித்தார்.

1973 – சோவியத் விண்கப்பல் லூனா 21 விண்ணுக்கு ஏவப்பட்டது.

1977 – சோவியத் தலைநகர் மாஸ்கோவில் ஆர்மீனிய பிரிவினைவாதிகளால் 37 நிமிடங்களில் மூன்று குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டதில் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.

1989 – இங்கிலாந்து கெக்வர்த் நகரில் போயிங் 727 வானூர்தி நெடுஞ்சாலை ஒன்றில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 126 பேரில் 47 பேர் உயிரிழந்தனர்.

1994 – உருசியாவின் விண்ணோடி வலேரி பொல்யாக்கொவ் மீர் விண்வெளி நிலையத்துக்கு சோயூஸ் விண்கப்பலில் பயணமானார். இவர் மொத்தம் 437 நாட்கள் விண்ணில் தங்கியிருந்தார்.

1995 – தமிழீழ விடுதலைப் புலிகள் – சந்திரிகா அரசு போர் நிறுத்தம் ஆரம்பமாகியது.

1996 – சயீர் தலைநகர் கின்சாசாவில் அன்டனோவ் ஏஎன்-32 சரக்கு வானூர்தி ஒன்று சந்தை ஒன்றில் வீழ்ந்ததில் தரையில் 223 பேரும், விமானத்தில் பயணம் செய்த ஆறு பேரில் இருவரும் உயிரிழந்தனர்.

2003 – அமெரிக்காவில், வட கரொலைனாவில் ஏர் மிட்வெசுட் வானூர்தி ஒன்று சார்லட் டக்ளஸ் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 21 பேரும் உயிரிழந்தனர்.

2003 – துருக்கியில் தியார்பக்கீர் விமான நிலையம் அருகே துருக்கிய விமானம் ஒன்று வீழ்ந்ததில் 75 பயணிகளில் 70 பேரும், பணியாளர்கள் அனைவரும் உயிரிழந்தனர்.

2004 – குயீன் மேரி 2 உலகின் மிகப் பெரும் பயணிகள் கப்பலை ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் மகாராணி திறந்து வைத்தார்.

2008 – கொழும்பு புறநகர்ப் பகுதியான ஜா-எலையில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் இலங்கை அமைச்சர் டி. எம். தசநாயக்க உட்பட மூவர் கொல்லப்பட்டனர்.

2009 – இலங்கை ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொழும்பு நகரில் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

2009 – கோஸ்ட்டா ரிக்காவின் வடக்கே 6.1 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 15 பேர் உயிரிழந்தனர்.

2019 – தெகுரானில் இருந்து கீவ் நோக்கிச் சென்ற உக்ரைனிய போயிங் 737–800 பயணிகள் வானூர்தி புறப்பட்ட சில நிமிட நேரத்தில் வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த 167 பயணிகள் உட்பட அனைத்து 176 பேரும் உயிரிழந்தனர்.

இன்றைய தின பிறப்புகள்

1823 – ஆல்பிரடு அரசல் வாலேசு, உவெல்சிய-ஆங்கிலேய புவியியலாளர், உயிரியலாளர் (இ. 1913)

1847 – ம. க. வேற்பிள்ளை, ஈழத்து உரையாசிரியர், தமிழறிஞர், பதிப்பாசிரியர் (இ. 1930)

1867 – எமிலி கிரீன் பால்ச், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (இ. 1961)

1891 – வால்தெர் பொதே, நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (இ. 1957)

1894 – மாக்சிமிலியன் கோல்பே, போலந்து கத்தோலிக்கப் புனிதர் (இ. 1941)

1899 – ஏ. பெரியதம்பிப்பிள்ளை, ஈழத்துத் தமிழறிஞர் (இ. 1978)

1899 – எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா, இலங்கையின் 4வது பிரதமர் (இ. 1959)

1902 – கார்ல் ரோஜர்ஸ், அமெரிக்க உளவியலாளர் (இ. 1987)

1909 – ஆஷாபூர்ணா தேவி, இந்திய எழுத்தாளர், கவிஞர் (இ. 1995)

1923 – பிரைஸ் டிவிட், அமெரிக்க இயற்பியலாளர்

1926 – கேளுச்சரண மகோபாத்திரா, இந்திய நடனக் கலைஞர் (இ. 2004)

1928 – மா. செங்குட்டுவன், தமிழகக் கவிஞர், எழுத்தாளர், இதழாளர் (இ. 2021)

1935 – எல்விஸ் பிரெஸ்லி, அமெரிக்கப் பாடகர் (இ. 1977)

1942 – ஸ்டீபன் ஹோக்கிங், ஆங்கிலேய இயற்பியலாளர், எழுத்தாளர்

1942 – ஜூனிசிரோ கொய்சுமி, சப்பானின் 56வது பிரதமர்

1975 – ஹாரிஸ் ஜயராஜ், இந்திய இசையமைப்பாளர்

1984 – கிம் ஜொங்-உன், வடகொரியாவின் 3வது அரசுத்தலைவர்

1987 – கே, தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர், பாடலாசிரியர்

இன்றைய தின இறப்புகள்

1324 – மார்க்கோ போலோ, இத்தாலிய வணிகர் (பி. 1254)

1642 – கலீலியோ கலிலி, இத்தாலிய இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1564)

1884 – கேசப் சந்திர சென், இந்திய இந்து மெய்யியலாளர், சீர்திருத்தவாதி (பி. 1838)

1914 – நடனகோபாலநாயகி சுவாமிகள், சௌராட்டிர மதகுரு (பி. 1843)

1941 – பேடன் பவல், சாரணர் இயக்கத்தைத் தோற்றுவித்த ஆங்கிலேயர் (பி. 1857)

1952 – அந்தோனியா மவுரி, அமெரிக்க வானியலாளர் (பி. 1866)

1976 – சோ என்லாய், சீனாவின் 1வது பிரதமர் (பி. 1898)

1994 – சந்திரசேகர சரசுவதி, காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதி (பி. 1894)

1997 – மெல்வின் கால்வின், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர் (பி. 1911)

2008 – டி. எம். தசநாயக்க, இலங்கை அமைச்சர், அரசியல்வாதி (பி. 1953)

2009 – லசந்த விக்கிரமதுங்க, இலங்கை ஊடகவியலாளர் (பி. 1958)

2010 – ஆர்ட் குலொக்கி, அமெரிக்க இயக்குநர் (பி. 1921)

2012 – அடிகளாசிரியர், தமிழகத் தமிழறிஞர் (பி. 1910)

2019 – ஜெயந்திலால் பானுசாலி, இந்திய குசராத்து அரசியல்வாதி (பி. 1964)

இன்றைய தின சிறப்பு நாள்

பொதுநலவாய நாள் (வடக்கு மரியானா தீவுகள்)

தட்டச்சு நாள்