
கன்னடத்தில் இரண்டு முறை மாநில விருதுகளை பெற்ற டைரக்டர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் மற்றும் சந்தோஷ் பிரதாப் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் “கொன்றால் பாவம்”. இப்படத்தில் ஈஸ்வரி ராவ், சார்லி, மனோபாலா, ஜெயக்குமார், மீசை ராஜேந்திரன், சுப்ரமணியம் சிவா, இம்ரான், சென்றாயன், ஸ்ரீனிவாசன், யாசர், கவிதா பாரதி, தங்கதுரை, கல்யாணி மாதவி உட்பட பலர் நடித்து உள்ளனர். கடந்த 1981-களில் நடக்கும் கிரைம் த்ரில்லர் கதையான இத்திரைப்படம் மோகன் ஹப்பு எழுதிய பிரபல கன்னட நாடகத்தை அடிப்படையாக கொண்டது ஆகும்.
பிரதாப் கிருஷ்ணா மற்றும் மனோஜ்குமார் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். அதோடு செழியன் ஒளிப்பதிவு செய்து உள்ளார். அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் இப்போது வெளியாகி உள்ளது. இதை இசையமைப்பாளர் அனிரூத் தன் சமூகவலைதளப்பக்கத்தில் வெளியிட்டார். தற்போது இந்த டிரைலர் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கொன்றால் பாவம் படம் வருகிற மார்ச் 10-ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Happy to release the trailer of #KondraalPaavamhttps://t.co/AbXKP8xHMD
Best wishes to the entire team @varusarath5, @ActorSanthosh, @SamCSmusic@EinfachStudios, @dayalpadmanaban, @trendmusicsouth
— Anirudh Ravichander (@anirudhofficial) March 1, 2023