அஜித் நடிக்கும் துணிவு, விஜய் நடிக்கும் வாரிசு ஆகிய இரண்டு படங்களும் நடப்பு ஆண்டின் முதல் திரைப்படங்களாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகி வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. ரிலீஸ் ஆன நாட்களிலிருந்து துணிவு படம் முன்னிலையில் இருந்து வந்தது. இதையடுத்து வந்த நாட்களில் வாரிசு சற்று துணிவு திரைப்படத்தை விட அதிக வசூல் செய்ய தொடங்கியது.

ஆனால் இப்போது நிலைமை பழைபடி மாறி வசூலில் துணிவு முன்னிலையில் இருக்கிறது. அந்த வகையில் இரண்டு படங்களும் வெளியாகி 18 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், துணிவு படம் தமிழகத்தில் ரூபாய்.123 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. அதேபோன்று வாரிசு படம் ரூபாய்.122 கோடிக்கும் மேல் வசூல் செய்து சிறு வித்தியாசத்தில் பின்தங்கி இருக்கிறது..