அண்மையில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 6ல் விக்ரமனுக்கு டைட்டில் கொடுக்காதது குறித்து பலரும் விஜய் டிவிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு boycott விஜய் டிவி என்றெல்லாம் டுவிட்டரில் ட்ரெண்ட் செய்தனர். பிக்பாஸ் டைட்டிலை வென்ற அஸீமுக்கு மொத்தம் ரூ.50 லட்சம் பணம் பரிசாக கொடுக்கப்பட்டது. மேலும் 1 காரும் அஸீமுக்கு பரிசளிக்கப்பட்டது.

பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கியதில் இருந்தே நடிகை வனிதா விஜயகுமார் தினசரி ஷோவை விமர்சித்து வந்தார். கடைசி நேரத்தில் விக்ரமனுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் டுவிட் செய்ததற்கு வனிதா கடும் கண்டனத்தை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிக்பாஸ் ஷோ முடிந்து வெளியில் வந்திருக்கும் அஸீமை வனிதா அழைத்து வீட்டில் விருந்து கொடுத்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.