இதுவரையிலும் நீங்கள் பல்வேறு வாகனங்களில் பயணித்திருக்ககூடும். எனினும் வாகனத்தின் நிறம் எதுவாக இருந்தாலும் அவற்றின் டயர்கள் எப்போதும் கருப்பு நிறத்தில் இருக்கும் என்பது குறித்து நீங்கள் எப்போதாவது யோசித்து இருக்கிறீர்களா. கடந்த 1917ம் வருடத்திற்கு முன் டயர்கள் கருப்பு நிறத்தில் இருக்காது. முன்னதாக வாகனங்களில் பயன்படுத்தப்படும் டயர்களின் நிறம் பழுப்பு (அ) வெள்ளை நிறமாக இருந்தது. இதையடுத்து அந்த நிறம் கருப்பு நிறமாக எப்படி மாறியது என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.
1917 ம் வருடத்திற்கு முன் டயர்கள் தயாரிப்பதில் பயன்படுத்தப்பட்ட இயற்கை ரப்பர் பழுப்பு (அ) வெள்ளை நிறத்தில் இருந்தது. அப்போதெல்லாம் டயர்களை வலுப்படுத்த ஜிங்க் ஆக்சைடு எனும் ரசாயனம் பயன்படுத்தப்பட்டது. எனினும் அதன் டயர்களில் மென்மை தன்மை இருந்தது. அதன்பின் டயர் தயாரிப்பாளர்கள் அதை மேம்படுத்துவதற்கு சில மாற்றங்களைச் செய்தனர். அதன்படி டயர் தயாரிப்பதில் கார்பன் உபயோகிக்கப்பட்டது. இதனால் அதன் நிறமானது கருப்பு நிறமாக மாறியது.
அதனை தொடர்ந்து சந்தையில் கருப்பு டயர்களின் அறிமுகமானது கடந்த 1917-ம் வருடம் துவங்கியது. கார்பன் சேர்ப்பதன் மூலம் சாலையில் வாகனம் போகும்போது டயர்களில் வெடிப்புகள் ஏற்படும் என்ற அச்சமும் குறைகிறது. அனைத்து டயர் தயாரிப்பாளர்களும் இம்முறையை பின்பற்றியதற்கும், இதன் வாயிலாக டயரின் நிறம் கருப்பு நிறமாக மாறுவதற்கும் இதுவே முக்கிய காரணம் ஆகும்.