இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் ஆன்லைன் பண பரிவர்த்தனை என்பது அதிகரித்துவிட்டது. குறிப்பாக யுபிஐ செயலிகளை மக்கள் அதிக அளவு பயன்படுத்த தொடங்கி விட்டனர். இந்த நிலையில் யூபிஐ மூலம் தவறான அக்கவுண்டுக்கு பணம் அனுப்பினால் அதனை எப்படி மீட்பது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மேலும் upi மூலம் வேறு ஒருவருக்கு தவறாக பணம் அனுப்பி விட்டால் paytm அல்லது google pay சாட் மூலம் அவரை தொடர்பு கொண்டு பணத்தை பெறலாம். அல்லது யுபிஐ வாடிக்கையாளர்கள் மையத்தை தொடர்பு கொண்டு 24 மணி முதல் 48 மணி நேரத்தில் பணத்தை திரும்ப பெறலாம். அதில் தீர்வு ஏற்படாவிட்டால் அருகில் உள்ள வங்கிக் கலையை தொடர்பு கொண்டு 45 நாட்களில் பணத்தை திரும்ப பெறலாம்.

NPCI இணைய முகவரி – UPI

Dispute redressal mechanism – complaint – transaction – nature of the Transaction
Incorrectly Transferred to another என்ற ஆப்ஷனை தேர்வு செய்து அதில் உள்ள கமெண்ட் பாக்ஸில் உங்களுடைய பிரச்சனை என்ன என்பதை சுருக்கமாக தேர்வு செய்ய வேண்டும்.

யுபிஐ மூலம் தவறான அக்கவுண்டுக்கு பணம் அனுப்பினால் அதனை மீட்கும் வழிமுறை.

பரிவர்த்தனை ஐடி, வங்கியின் பெயர், UPI ID, தவறாக செலுத்திய தொகை, பரிவர்த்தனை செய்த தேதி மற்றும் மெயில் ஐடியை என்டர் செய்ய வேண்டும்.

உங்களுடைய யுபிஐ அக்கவுண்டுக்கு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை வழங்கவும்.

உங்கள் புகைப்படத்தை பதிவேற்றிய பிறகு அனைத்தையும் ஒருமுறை சரிபார்க்க பின் புகாரை பதிவு செய்தால் உங்கள் பணம் உங்களுக்கே கிடைக்கும்.