ஈ-பேமெண்ட் வசதிகளில் முக்கியப் பங்கு வகிக்கும் யுனிபைட் பேமெண்ட்ஸ் இன்டர்பேஸ் (UPI) மூலமாக பண பரிவர்த்தனை செய்யும் பயனர்கள் எண்ணிக்கை நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிறிய பெட்டிக்கடை முதல் பெரிய ஷாப்பிங் மால் வரை, யு.பி.ஐ மூலமான பணம் செலுத்தும் நடைமுறை பொதுவானதாகிவிட்டது. இந்த நிலையில், பண பரிவர்த்தனைகளுக்கான உச்சவரம்பை உயர்த்தியுள்ளதாக இந்திய தேசிய பெமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் (NPCI) அறிவித்துள்ளது. புதிய உச்சவரம்புகள் கீழ்கண்டவாறு:

புதிய யு.பி.ஐ பரிவர்த்தனை வரம்புகள்:

தனிநபர் பரிவர்த்தனை ₹1 லட்சம்
மருத்துவக் கல்விக்கட்டணம் ₹5 லட்சம்
பங்குச் சந்தை, காப்பீடு முதலீடு ₹10 லட்சம்
அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை ₹10 லட்சம் ₹2 லட்சம்
கிரெடிட் கார்டு கடன் திருப்பிச் செலுத்துதல் ₹6 லட்சம் ₹2 லட்சம்
நகை வாங்கும் பரிவர்த்தனை ₹6 லட்சம் ₹1 லட்சம்
வங்கியில் டெப்பாசிட் (தொகை வைப்பு) ₹5 லட்சம் புதிய வரம்பு

பயனர்களின் தேவையை கருத்தில் கொண்டு, பண பரிவர்த்தனைகளில் எளிமை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் NPCI இந்த புதிய  மாற்றங்களை அறிவித்துள்ளது. முன்னதாக சில குறைந்த வரம்புகள் காரணமாக, உயர் மதிப்புடைய பரிவர்த்தனைகள் பலவிதமாக கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டிருந்தன. இந்த புதிய அறிவிப்பின்படி, பங்குச் சந்தை முதலீடு, காப்பீடு பிரீமியம், அரசு வரி உள்ளிட்ட பல துறைகளில் ஒரே பரிவர்த்தனையில் அதிக தொகை அனுப்பும் வசதி UPI வாயிலாக கிடைக்கப்பெற உள்ளது.

மேலும் பரிவர்த்தனை வரம்பு உயர்த்தப்பட்டாலும், பாதுகாப்பான பேமெண்ட் முறைகளைப் பின்பற்ற வேண்டும் என வங்கி மற்றும் NPCI வலியுறுத்துகின்றன. அத்துடன், OTP, PIN போன்ற ரகசிய தகவல்களை எவருடனும் பகிர வேண்டாம் என்றும் எச்சரிக்கின்றன.