சென்னை தலைமைச் செயலகத்தில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மற்றும் பதிவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். அதன் பிறகு அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் வெவ்வேறு முறைகள் பின்பற்றப்படுவதை மாற்றி ஒரே மாதிரியான நிர்வாகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அதன்படி அனைத்து பல்கலைக்கழகங்களில் உள்ள பேராசிரியர்கள், பதிவாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஒரே மாதிரியான சம்பளம், மாணவர்களுக்கு ஒரே தேர்வு கட்டணம் போன்ற ஒரே மாதிரியான நிர்வாகம் அமைக்கப்படும். இதற்காக ஒரு குழுவை அமைத்து விரைவில் பல்கலைக்கழகங்களில் ஒரே மாதிரியான நிர்வாகம் அமைப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பல்கலைக்கழகங்களுக்கு இடையே வேறுபாடு இல்லாமல் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.