வீட்டை சுத்தம் செய்யும்பொது கிடைக்கும் காலாவதி ஆன (அ) பயன்படுத்தப்படாத மருந்துகளை நாம் அனைவரும் குப்பை தொட்டியில் தூக்கி எறிந்து விடுகிறோம். எனினும் அது தவறு என உலக சுகாதார நிறுவனம்(WHO)  எச்சரிக்கிறது. WHO காலாவதியான மருந்தை அப்புறப்படுத்துவதற்குரிய முதல் நம்பகமான வழி, மருந்துகளை உற்பத்தியாளரிடம் திருப்பிக் கொடுப்பதே என தெளிவான ஆணையை கொண்டிருக்கிறது. மருந்து திரும்ப பெறக்கூடிய மையங்கள் (அ) மருந்தகங்கள் இருத்தல் வேண்டும். திரும்ப பெறும் மையம் இல்லாத சூழலில், மருந்துகளை நிராகரிக்க வேறு வழிகள் இருக்கிறது.

நீங்கள் மருந்துகளை சுத்தம் செய்யலாம் (அ) பாதுகாப்பாக நிராகரித்து விடலாம். மருத்துவ ஆலோசார்கள் இதுபற்றி கூறியதாவது “அனைத்து மருந்துகளையும் தூக்கி எறிவதன் வாயிலாக சுத்தப்படுத்த முடியாது. ஏனென்றால் அவை விபத்து நுகர்வு (அ) சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு ஆளாவதால் மனிதர்களுக்கு அதிக ஆபத்து இருக்கிறது. கழிவுநீரிலுள்ள தண்ணீர் உடன் இந்த மருந்துகள் கலந்து பெரும் ஆபத்தை விளைவிக்கும்.

மருந்தை அதன் கவர்களிலிருந்து எடுத்து குப்பைகள் (அ) பயன்படுத்திய காபி கிரவுண்டுகள் உள்ளிட்ட பிற விரும்பத்தகாத குப்பைகளுடன் கலக்க வேண்டும். மாத்திரைகள் (அ) காப்ஸ்யூல்களை நசுக்கவேண்டாம். இதை சீல் செய்யக்கூடிய பிளாஸ்டிக் பை (அ) சீல் செய்யப்பட்ட டப்பாக்களில் வைக்க வேண்டும். மருந்து பாட்டிலிருந்து உங்களது Rx எண் மற்றும் அனைத்து தனிப்பட்ட தகவல்களையும் அகற்றுவதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.