
தொழில்நுட்பம் வளரவளர மக்களின் கைகளில் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடுகளும் அதிகரித்து விட்டது என்றே சொல்லலாம். இதனிடையே ஸ்மார்ட்போனை அதிக நேரம் பயன்படுத்துவதன் வாயிலாக அது சூடாகலாம். அதே வெப்பநிலையில் ஸ்மார்ட்போனை உபயோகப்படுத்திக் கொண்டே இருந்தால் பேட்டரி சேதமடையும். குறிப்பாக சில நேரங்களில் அதிக சூடால் செல்போன் பேட்டரி வெடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
மொபைல் எப்போதெல்லாம் சூடாகும்?
# கேம்கள் விளையாடும்போது
# போனில் Brightness அதிகம் இருப்பின் சூடாகும்
# உங்களது ஆப்களை அப்டேட் செய்யவில்லை எனில்
# நேரடியாக சூரிய ஒளியில் வைத்து இருந்தால்
# ஆண்ட்ராய்டு மொபைல்களில் வைரஸ்களோ (அ) மற்ற ஆப்களோ இன்ஸ்டால் செய்யும்போது விரைவில் வெப்பமடைய வாய்ப்பு உள்ளது.
ஆகவே ஆண்ட்ராய்டு மொபைல்கள் வெப்பமாவதை தவிர்ப்பதற்கு உங்களுக்கு தெரியாத ஆப்களை இன்ஸ்டால் செய்வதை தவிர்க்க வேண்டும்.