ஜியோ தன் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது பல ரீசார்ஜ் திட்டங்களை குறைந்த விலையில் அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருவதை முன்னிட்டு குறைந்த விலை டேட்டா பேக்குகளை ஜியோ நிறுவனம் வழங்கி வருகிறது.

அந்த வகையில் ரூ.222க்கு 50 ஜிபி டேட்டாவையும், ரூபாய்.444க்கு 100 ஜிபி டேட்டாவையும் ஜியோ நிறுவனம் வழங்குகிறது. இதனை கொண்டு ஜியோ சினிமா அப்ளிகேஷனில் இலவசமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை பார்த்து ரசிக்கலாம். இந்த திட்டங்கள் ஐபிஎல் முடியும் வரை நடைமுறையில் இருக்கும் என்று தெரிகிறது.