தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களாக இருப்பவர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சிவகார்த்திகேயன். தற்போது மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மாவீரன் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடிக்கிறார். இதேபோன்று நடிகர் உதயநிதி ஸ்டாலின் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் வைகை புயல் வடிவேலு போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இந்நிலையில் மாவீரன் மற்றும் மாமன்னன் ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் என தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. இரு படங்களும் ஜூன் 29-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பிரின்ஸ் திரைப்படம் தோல்வி அடைந்த நிலையில் தற்போது மாவீரன் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ளது. இதேபோன்று உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் மாமன்னன் என்பதால் அந்த படத்தின் மீதும் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது. மேலும் சிவகார்த்திகேயன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆவதாக வெளிவந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியேள்ளது.