
ராஜஸ்தான் மாநிலம் டவுசா மாவட்டத்தில் விவசாய நிலத்தில் 35 அடி ஆழ்துளை கிணறு இருந்துள்ளது. அந்த ஆழ்துளை கிணற்றில் நேற்று மாலை இரண்டரை வயது பெண் குழந்தை தவறி விழுந்துள்ளது. இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து தேசிய பேரிடர் மேலாண் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மீட்பு பணி அதிகாரிகள் கூறுகையில் பெண் குழந்தை சுமார் 15 அடி ஆழத்தில் சிக்கி உள்ளது. இந்தக் குழந்தை விழுந்த இடத்தில் உள்ள பக்கத்து நிலத்தில் ஜேசிபி எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி குழந்தையை மீட்கும் பணி நடைபெற்று வந்தது. விடிய விடிய குழந்தையை மீட்கும் பணி நடைபெற்ற வந்த நிலையில் இப்போது குழந்தையே பத்திரமாக மீட்டு உள்ளனர். மேலும் குழந்தையை பத்திரமாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று உள்ளனர் என தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.