டுவிட்டரில் 10 ஆயிரம் எழுத்துகளை கொண்ட நீண்ட பதிவுகளை வெளியிடும் வசதியை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. டுவிட்டர் நிறுவனத்தை விலை கொடுத்து வாங்கியது முதல் பல அதிரடி நடவடிக்கைகளை எலான் மஸ்க் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் சென்ற இரண்டு நாட்களுக்கு முன் ஏப்ரல் 20 ஆம் தேதிக்குள் சந்தா செலுத்தாவிட்டால் ப்ளூ டிக் வசதி துண்டிக்கப்படும் என்று தன் ட்விட்டர் பக்கத்தில் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் 10 ஆயிரம் எழுத்துகளை கொண்டு நீண்ட பதிவுகளை டுவிட்டர் கணக்குகளில் வெளியிடும் வசதியை ட்Twitter நிறுவனமானது அறிமுகப்படுத்தி இருக்கிறது.

டுவிட்டர் நிறுவனத்தின் போட்டியான சப்ஸ்டெக் எனும் சமூக ஊடக நிறுவனத்துடனான நீண்ட போராட்டத்தை அடுத்து இந்த புது வசதியை எலான் மஸ்க் அறிமுகப்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டுவிட்டர் வாயிலாக பயனர்கள் பணம் சம்பாதிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. யூடியூப் உள்ளிட்ட சமூகவலைதளங்களை போன்று டுவிட்டரிலும் அதிக பின்தொடர்பவர்களை கொண்ட பிரபலுங்களுக்கு அவர்களின் பங்களிப்பின் அடிப்படையில் பணம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.