
அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களை சந்தித்த வீடியோ வைரலாகி வருகிறது.
‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சியை நடிகர் விஜய் பிப்ரவரி இரண்டாம் தேதி தொடங்கியுள்ளார். அதேசமயம் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவில்லை என்றும், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை எனவும் விஜய் தெரிவித்தார். மேலும் 2026 சட்டமன்ற தேர்தலே இலக்காக வைத்துள்ளதாக விஜய் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, நான் ஏற்கனவே ஒப்பு கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன். அதுவே தமிழ்நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றி கடனாக கருதுகிறேன் என தெரிவித்துள்ளார்.
புதிதாக கட்சி ஆரம்பித்த நடிகர் விஜய்க்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகின,ர் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இன்று நடிகர் விஜய் இரண்டாவதாக அறிக்கை வெளியிட்டு அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
இந்நிலையில் அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் GOAT படப்பிடிப்பு தளத்தில் மீண்டும் ரசிகர்களை சந்தித்தார். புதுச்சேரியில் படப்பிடிப்பு தளத்தில் குவிந்த ரசிகர்களை பார்த்து கை அசைத்தார் நடிகர் விஜய். படப்பிடிப்பு தளத்திலிருந்து வாகனத்தில் ஏறி நின்று ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.
அங்கிருந்த ரசிகர்கள் அனைவரும் விஜய் மீது பூக்களை தூவி வரவேற்றனர். அதேபோல ரசிகர்கள் விஜய்க்கு மாலையை தூக்கி போட்டனர். அதனை விஜய் தனது கழுத்தில் போட்டுக் கொண்டார். இது அங்கிருந்து ரசிகர்களை கவர்ந்தது. தொடர்ந்து ரசிகர்களுக்கு கையசைத்து வணக்கம் தெரிவித்து, பின்னர் அந்த மாலைகளை ரசிகர்களை நோக்கி வீசினார். நடிகர் விஜய்யின் இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது..
Dharisanam 🤍#TNWelcomesTVKVijay pic.twitter.com/hGf7dbI0hF
— Actor Vijay Fans (@Actor_Vijay) February 4, 2024
Cute moment 🤍🤍🤍#TNWelcomesTVKVijay #TheGreatestOfAllTimepic.twitter.com/P0k9vs7ugy
— Actor Vijay Fans (@Actor_Vijay) February 4, 2024
This is Vijay’s kgf 🔥#TnWelcomesTVKVijay #TheGreatestOfAllTimepic.twitter.com/GWkGzUxWEu
— Actor Vijay Fans (@Actor_Vijay) February 4, 2024
Glimpse Of #ThalapathyVijay From Today's GOAT Shooting Spot .. His 1st Glimpse After Political Announcement 🔥👌#TNWelcomesTVKVijaypic.twitter.com/1ocYbPMFVr
— Arun Vijay (@AVinthehousee) February 4, 2024