தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு இன்று நடைபெற உள்ள நிலையில் அங்கே லட்சக்கணக்கான தொண்டர்கள் அணி திரண்டு வருகை தந்துள்ளனர். அவர்களில் சிலர் செய்தி ஊடகங்களுக்கும்,  youtube சேனல்களுக்கும் அவ்வபோது பேட்டி அளித்து வருகின்றனர். அந்த வகையில், நபர் ஒருவர் கூறுகையில்

நான் அதிமுக கட்சியில் இருந்தவன். தளபதி அவர்கள் கட்சி தொடங்கியதும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து விட்டேன். நான் கட்சியில் இணைந்ததற்கு மிக முக்கியமான காரணம் அதிமுக செயல்பாடு சரி இல்லை. அங்கே அடிப்படை உறுப்பினர்களுக்கு முறையான மரியாதை வழங்கப்படுவதில்லை.

ஆனால் தமிழக வெற்றிக்கழக உறுப்பினர்களோ விஜய் அவர்களோ அப்படி அல்ல, அனைவரையும் சமமாக நடத்துவார். நான் மட்டுமல்ல எனது மொத்த குடும்பமும் தமிழக வெற்றிக்கழகத்திற்காக இனி வரக்கூடிய காலங்களில் பணிபுரியும் கண்டிப்பாக விஜய் அவர்களை தமிழக முதல்வராக மாற்றி காட்டுவோம் என தெரிவித்துள்ளார்.