நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நாளை விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இதற்காக தேசிய நெடுஞ்சாலை அருகில் 85 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான திடல் அமைக்கப்பட்டுள்ளது, அங்கு சுமார் ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், திரளான ரசிகர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் மாநாட்டில் பங்கேற்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மாநாட்டிற்கான இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வழக்கமான போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கவும், போக்குவரத்து நெரிசல் குறைக்கவும் காவல்துறை சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. குறிப்பாக, மாநாட்டிற்கு வரும் போது நடிகர் விஜய் ரோடு ஷோ நடத்தக் கூடாது என காவல்துறையினர் அவர் தலைமையிலான குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளனர். ரோடு ஷோ நடந்தால் கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்துக்கு தடங்கல் ஏற்படும் என்பதே இதற்கான காரணம்.