மீனவர்களின் படகுகளில் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) கொடி நிறம் வர்ணம் பூசப்பட்டிருந்த காரணத்தால் மானிய மண்ணெண்ணெய் வழங்க மறுத்த விவகாரம் தொடர்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“தவெக கொடி பறக்கக்கூடாது என்று சொல்வது எப்படி நீதி? ஒரே சட்டத்தில் எல்லாரும் சமம் தான். திமுகவின் கொடியும் சில இடங்களில் பறக்கிறது. அதனால் ஒரே கண்ணால எல்லாரையும் பாருங்க, ஒரே சட்டம் எல்லாருக்கும் பொருந்தணும்” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், “ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பு , இன்னொரு கண்ணுக்கு வெண்ணெய்  போடக்கூடாது. இது நேரடியாக பாகுபாடே. மக்கள் இதை வேடிக்கைப் பார்ப்பதில்ல; ஏமாற்றமாகப் பார்க்கிறார்கள். அடக்குமுறைக்கு அஞ்சாதவர்கள் தான் தமிழர்கள். எந்த அடக்குமுறையும் எங்களை தடுக்க முடியாது. வரும் 2026 தேர்தலில்  அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும்” என்றார் ஜெயக்குமார். இது தவெக கொடியை அடிப்படையாக வைத்து நடைபெறும் அதிகார நெருக்கடி எனவும் அவர் குற்றம் சாட்டினார்.