கோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் டிடிஎஃப் வாசன். இவர் யூட்யூபில் twin throttlers என்ற சேனல் நடத்தி வருகிறார். இந்த சேனலில் இவர் நீண்ட தூரம் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களில் பயணம் செய்து அதை வீடியோவாக பதிவிட்டு 2K கிட்ஸ் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்துள்ளார்.  விளம்பரத்திற்காக இது போன்ற செயலில் ஈடுபடும் TTF வாசனின்  youtube சேனலை மூடிவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சிறையில் மருத்துவ சிகிச்சை அளிக்க நீதிபதி கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்துள்ளார். காஞ்சிபுரம் அருகே வீலிங் செய்த விபத்தில் டிடிஎஃப் பார்சல் விபத்தில் கைதான நிலையில்,  அதற்கு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் 3 லட்சம் மதிப்பிலான பாதுகாப்பு உடை அணிந்ததால் டிடிஎஃப் உயிர் தப்பினார் என போலீசார் தரப்பில் வாதிடப்பட்டது.