
யூடியூபில் மூலம் பிரபலமான, ‘Travel With Jo’ என்ற பயண வலைதளத்தை இயக்கி வந்த ஹரியானாவைச் சேர்ந்த ஜோதிகா மல்ஹோத்ரா (33), இவர் பாகிஸ்தானுக்காக உளவுத்தொழில் செய்ததற்காக ஹிஸார் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2023-இல் பாகிஸ்தான் உயர் தூதரக அதிகாரி ஏஹ்சான்-உர்-ரஹீம் என்ற நபருடன் தொடர்பு கொண்ட ஜோதிகா, பாகிஸ்தானுக்குச் சென்று ISI அதிகாரிகளை சந்தித்து, இந்திய ராணுவ இயக்கங்கள், முகாம்கள் பற்றிய முக்கிய தகவல்களை பகிர்ந்ததாக தெரியவந்துள்ளது.
மேலும் பாகிஸ்தானில் ஷாகிர் மற்றும் ராணா ஷஹ்பாஸ் ஆகிய உளவுத்துறையினரை நேரில் சந்தித்ததாகவும், அவர்கள் எண்களை ‘Jat Randhawa’ என்ற பெயரில் சேமித்து, WhatsApp, Telegram, Snapchat வழியாக தொடர்பு வைத்திருந்ததாகவும் விசாரணையில் கூறியுள்ளார்.
அந்த வழக்கில் ஹரியானாவின் பாணிப்பட்டில் பாதுகாவலராக பணியாற்றிய 24 வயது நௌமான் இலகி என்பவரும், கேதலில் கல்வி பயிலும் 25 வயது மாணவர் தேவேந்திர சிங் தில்லோனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தில்லோன் கடந்த ஆண்டு கார்த்தார்பூர் வழியாக பாகிஸ்தானுக்குச் சென்று ISI அதிகாரிகளுடன் சந்தித்ததாகவும், பாட்டியாலா ராணுவ முகாமின் புகைப்படங்களை பகிர்ந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் நௌமான், பாகிஸ்தானுக்கு தகவல் வழங்கியதற்காக தனது மைத்துனரின் வங்கிக் கணக்கில் பணம் பெற்றிருந்தார் என்றும் விசாரணையில் கூறப்பட்டுள்ளது.
ஜோதிகா தனது YouTube வீடியோக்களில் பாகிஸ்தானில் ஹிந்து கோயில்கள் மற்றும் ரமசான் உணவுகள் குறித்து பயண அனுபவங்களைப் பகிர்ந்திருந்தார். இவர் இந்திய ரூபாயை பாகிஸ்தான் கரன்சியுடன் மாற்றிய அனுபவத்தை “goosebumps தரும் தருணம்” எனவும் விவரித்திருந்தார்.
ஆனால் தற்போது அவருக்கு எதிராக தேசத்துரோகக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் ஒருங்கிணைப்பு, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டதற்காக, ஜோதிகா மல்ஹோத்ரா மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, தற்போது 5 நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.