
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள பகுதியில் தங்கராஜ்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அருள் (36) என்ற மகனும், சரண்யா (38) என்ற மகளும் இருந்துள்ளனர். இவர்கள் ஆற்றில் மீன் பிடிக்கும் தொழிலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் 3 பேரும் மீன்பிடிப்பதற்காக ஈரோடு மாவட்டம் கொடிமுடி அருகே உள்ள காவேரி ஆற்றுக்கு சென்றுள்ளனர். அங்கு கரையில் அமைந்துள்ள மின் மயானம் அருகே அமர்ந்திருந்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு திடீரென்று மலைத்தேனீக்கள் வந்தது. இதை பார்த்த அவர்கள் 3 பேரும் ஓட ஆரம்பித்தனர். இருப்பினும் அந்த மலைத்தேனீக்கள் அவர்கள் 3 பேரையும் கொட்டியது. இதில் மூவரும் பலத்த காயமடைந்தனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர் தங்கராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். மேலும் அருள் மற்றும் சரண்யா சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.