பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் கஜோல். இவர் தமிழில் மின்சார கனவு, வேலையில்லா பட்டதாரி 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கஜோல் தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது சமூக வலைதளங்களில் இருந்து ஓய்வு எடுத்துக் கொள்கிறேன் என்று கஜோல் அறிவித்துள்ளார்.

இது தன்னுடைய வாழ்க்கையின் கடினமான சோதனைகளில் ஒன்று எனவும் கஜோல் கூறியுள்ளார். அதோடு இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே வெளியிட்டுள்ள பழைய பதிவுகளையும் அவர் நீக்கியுள்ளார். ஆனால் சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதற்கான காரணத்தை கஜோல் வெளியிடவில்லை. மேலும் நடிகை கஜோலின் முடிவுக்கு சிலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருவதோடு சிலர் விமர்சித்தும் வருகிறார்கள்.