
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜாதி வாரி கணக்கெடுப்பு பத்தி பேசுவதற்கு எனக்கு உரிமை, தகுதி இருக்கு. என்னா… நான் ஆனைமுத்து ஐயாவுடைய புள்ள… நான் பேசலாம். இந்த நாட்ல குடிவாரி கணக்கெடுப்பு வலியுறுத்தி, அந்த இட ஒதுக்கீடு பேசி, 69 விழுக்காடு பெற்றுக்கொடுக்க மண்டல கமிஷன் பரிந்துரை கொண்டு வந்து… வாங்கி கொடுத்த புரட்சியாளன் எங்கய்யா ஆனைமுத்து தான். இங்கே எவரும் கிடையாது. பெரியார் கூட கிடையாது. வி.பி சிங் ஆட்சி காலத்துல செயல்படுத்திய வீரன் அவர்தான்.
எங்களுக்கு உரிமை தகுதி இருக்கு. உங்க மனசான்று தொட்டு சொல்லுங்க நீங்க… ஊடகவியலாளர் என்பதை மறந்துடுங்க…. ஒரு மனிதனா சொல்லுங்க…. நாட்டின் குடிமகனா சொல்லுங்க…. காங்கிரஸ் ராகுல் காந்தி எல்லாம் குடிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகிறது உண்மையிலேயே கொடுமையா ? இல்லையா ? நேத்து தான் கட்சி ஆரம்பிச்சி இருக்கீங்களா ?
இந்த நாட்டை விடுதலை பெற்ற இந்தியாவை… அரை நூற்றாண்டுக்கு மேலாக ஆண்ட கட்சி நீங்கதான். போன முறை 10 ஆண்டுகள் மன்மோகன் சிங் தலைமையில் ஆட்சியில இருந்தீங்களே… அப்போ ஏன் நீங்க சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கல ? மோடி எதுக்காக பயப்படுகிறார். ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க என இப்போ கேக்குறீங்க… நீங்க பத்தாண்டு ஆட்சியில் இருக்கும் போது எதுக்காக பயப்பட்டீர்கள்.. அதுக்காக தான் அவரும் பயப்படுறாரு என தெரிவித்தார்.