நானும் ரவுடிதான் படத்தில் வரும் மூன்று நிமிடம் பாடல் காட்சிக்காக பத்து கோடி கேட்டதாக தனுஷ் மீது நடிகை நயன்தாரா வெளியிட்ட குற்றச்சாட்டு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனின் திருமணம் வெகு விமர்சையாக நடந்தது. இவர்களது திருமண வீடியோவை வெளியிடாமல் இரண்டு ஆண்டு காலமாக வைத்துள்ளனர். இதனை ஒரு ஆவணப்படமாக வெளியிட உள்ளதாகவும் இதனை நெட்பிலிக்ஸ்  நிறுவனம் பல கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ள நிலையில். இந்த ஆவணப்படம் நவம்பர் மாதம் 18ஆம் தேதி வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் ஆவணப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில் நானும் ரவுடிதான் படத்தின் மூன்று வினாடி பாடல் காட்சிகள் இடம் பெற்றதால் அதற்கு காப்பிரைட்ஸ் உரிமமாக ரூபாய் பத்து கோடி நடிகர் தனுஷ் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து நடிகை நயன்தாரா தனது இணைய பக்கத்தில் தனுசுக்கு எதிராக செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார். இதுகுறித்து ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் நானும் ரவுடிதான் படத்திற்காக கடந்த 2016 ஆம் ஆண்டு விருதுபெரும் நிகழ்வில் நயன்தாரா நடிகர் தனுஷிடம் நானும் ரவுடிதான் படத்தில் தான் சரியாக நடிக்காததால் தனுசுக்கு என் மீது சிறிது கோபம் அதனால் தான் மன்னிப்பு கேட்பதாக கூறிய வீடியோ வைரலாகி வருகிறது.