
தமிழகத்தில் அரசு பணி போட்டி தேர்வுகளுக்கான கட்டணம் இல்லா பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் 12 இன்று முதல் 16ஆம் தேதி வரை நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. TNPSC, SSC, ரயில்வே, வங்கி மற்றும் ஆசிரியர் தேர்வு, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு உள்ளிட்ட அனைத்து தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி வழங்கப்படும். மேலும் tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் இந்த தேர்வுகளுக்கான மென்பட குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.