தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக அரசு பணிகளுக்கு போட்டி தேர்வுகள் நடைபெறுகிறது. இந்த போட்டி தேர்வுகளுக்கு கலந்து கொள்பவர்களுக்காக இலவச பயிற்சி வகுப்புகளும் நடைபெறுகிறது. அந்த வகையில் TNPSC, SSC, IBPS, RRB ஆகிய தேர்வுகளுக்கு நாளை முதல் தமிழக அரசின் இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்குகிறது.

அதன்படி சென்னை தியாகராய கல்லூரியில் 500 இடங்களுக்கும், சேப்பாக்கம் மாநில கல்லூரி வளாகத்தில் 300 இடங்களுக்கும் நடைபெறுகிறது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த பயிற்சி வகுப்புகள் மதியம் 2 மணி முதல் மாலை 6:00 மணி வரை 6 மாத காலத்திற்கு நடைபெறும்.

இந்த பயிற்சி வகுப்புகளில் சேர விரும்புபவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த பயிற்சி வகுப்புகளில் சேர விரும்புபவர்கள் www.cecc.in என்ற இணையதளத்தில் முகவரியில் மே 31ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் நிலையில் கூடுதல் விவரங்களை 044-25954905, 044-285110537 என்ற தொலைபேசி நம்பர்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.