
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய மூலமாக போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது டிஎன்பிஎஸ்சி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது இனிதேர்வர்கள் விடை குறிப்புகளில் கருப்பு மை பேனாவை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. முன்னதாக பால் பாயிண்ட் பேனா கருப்பு அல்லது நீற நிறத்தை பயன்படுத்தலாம் என்று இருந்தது.
ஆனால் தற்போது கருப்பு நிற மை பேனாவை மட்டும் தான் உபயோகப்படுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தேர்வு எண்ணை எழுதுதல் முதல் பக்கத்தில் கையெழுத்திடுதல், விடை எழுதுதல், படம் வரைதல், அடிக்கோடு போடுதல் போன்ற அனைத்துக்கும் ஒரே வகையான பேனாவை பயன்படுத்த வேண்டும். மேலும் கருப்பு மை பேனாவை தவிர மற்ற பேனாக்களை பயன்படுத்தினால் அந்த விடைத்தாள்கள் செல்லாததாகிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.